• JUST IN | சுட சுட

பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம்: ஏப்ரல் 13 வரை கால அவகாசம் நீட்டிப்பு!





இந்தியாவில் பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் நடைமுறைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால் ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் நடைமுறை கொரோனா பரவல் காரணமாக இணையத்தில் நடத்தப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு கடந்த மார்ச் 9-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், கால அவகாசத்தை ஏப்ரல் 13-ம் தேதி வரை நீட்டித்து ஏஐசிடிஇ உத்தரவிட்டுள்ளது. இந்த வாய்ப்பை கல்லூரிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :