• JUST IN | சுட சுட

விரைவில் பெட்ரோல், டீசல் விலைகள் குறையும்: மத்திய அமைச்சர் உறுதி!





விரைவில் அடுத்து வரும் சில நாட்களில் பெட்ரோல், டீசல் விலை மேலும் குறைக்கப்படும் என மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி இறுதியிலும், மார்ச் முதல் வாரத்திலும் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் விலைகள் உயர்த்தப்பட்டன. சில மாநிலங்களில் பெட்ரோல் லிட்டர் விலை ரூ.100-ஐ தாண்டியது. 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டதும், இவற்றின் விலைஉயர்வை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தின. இந்நிலையில், கடந்த வாரத்தில் தொடர்ச்சி மூன்று நாட்கள் பெட்ரோல், டீசல் விலைகளை 61 பைசா, 60 பைசா என எண்ணெய் நிறுவனங்கள் குறைத்தன.

இந்நிலையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸ் சிலிண்டரின் விலை மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். இது தொடர்பாக டெல்லியில் நேற்று அவர் அளித்த பேட்டி:

பெட்ரோல், டீசல் விலை மற்றும் சமையல் காஸ் சிலிண்டர் விலை தற்போது குறையத் தொடங்கியுள்ளது. எதிர்வரும் நாட்களில் இவற்றின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது. நாங்கள் முன்பே கூறியது போல், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைக்கப்படுவதால் ஏற்படும் பலன் அனைத்தையும் மக்களுக்கே வழங்குவோம்,

-இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :