• JUST IN | சுட சுட

#Breaking : காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் தமிழக வருகை ரத்து!





கொரோனா அறிகுறி காரணமாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் தமிழக வருகை ரத்து.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அவர்கள், பரப்புரை மேற்கொள்வதற்காக, நாளை தமிழக வருவதாக அறிவிப்புகள் வெளியானது. இந்நிலையில், தற்போது இந்த வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிரியங்கா காந்தி கடந்த 3 மாதங்களாக தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும் பல்வேறு கட்டங்களாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். தற்போது பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பிரியங்கா காந்தி வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதன் காரணமாக இவரது தமிழக வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :