• JUST IN | சுட சுட

எம்ஜிஆரின் ’’மதுரை வீரன்’’ படத்தை யாராலும் மறக்க முடியாது: பிரதமர் மோடி புகழாரம்.





தமிழக சட்டமன்றத் தேர்தல் பரப்புரைக்காக மதுரை வந்த பிரதமர் மோடி, ‘’வெற்றிவேல், வீரவேல்; நீங்கள் எல்லாம் நல்லா இருக்கீங்களா? மதுரை வந்தது மிக்க மகிழ்ச்சி’’ என்று பிரதமர் மோடி தமிழில் உரையாடினார். தொடர்ந்து பிரதமர் பேசியதாவது:

தமிழ் பண்பாட்டின் முக்கிய மையமாக மதுரை திகழ்கிறது . புண்ணிய பூமியாக விளங்குகிறது.உலகத்தின் தொன்மை மொழியான தமிழை, சங்கம் வைத்து வளர்த்தது மதுரை . மறைந்த தென் மாவட்ட தலைவர்கள் அனைவருக்கும் மரியாதை செலுத்துகிறேன். 1980ல் எம்ஜிஆர் ஆட்சியை மத்தியில் இருந்த காங்கிரஸ் கட்சி கலைத்தது.அப்பொழுது தென் தமிழக மக்கள் எம்.ஜி.ஆருக்கு உறுதுணையாக இருந்தனர்.எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த மதுரை வீரன் படத்தை யாராலும் மறக்க முடியாது

.

தமிழக மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. தமிழகத்தில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் தருகிறது . சாலை போக்குவரத்து, ரயில்வே கட்டுமானம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து கிராமங்களுக்கும் இணையதள சேவை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மதுரையில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும்.

-இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :