• TRENDING | பர பர

தண்ணீருக்குள் இத்தனை நிமிடங்களா! சாதனை படைத்த 54 வயதான மனிதர்!





பொதுவாக மனிதர்களால் தண்ணீருக்குள் சில விநாடிகள் தாக்குபிடிப்பதே அரிதான காரியம். ஆனால், குரோஷியாவை சேர்ந்த 54 வயதான புடிமிர் புடா என்ற மனிதர், தண்ணீருக்கு அடியில் 24 நிமிடங்கள் 33 நொடிகள் மூச்சு பிடித்து தனது சொந்த சாதனையை முறியடித்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

சோப்பக்கிலுள்ள நீச்சல் குளம் ஒன்றில், அதிகாரிகளின் முன்னிலையில், இவர் இந்த புதிய சாதனையை நிகழ்த்தி காட்டினார். தலையை நீருக்கடியில் மூழ்கச் செய்வதற்கு முன், தூய்மையான ஆக்ஸிஜனை ஹைப்பர்வென்டிலேட் செய்து, தனது உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரித்து கொண்டார். பின்னர் நீருக்கு அடியில் சென்று இந்த சாதனையை செய்துள்ளார்.

இதற்கு முன்னதாக, புடிமிர் 24 நிமிடம் 11 நொடிகள் நீருக்குள் தம் பிடித்து சாதனை படைத்திருந்த நிலையில், தற்போது 24 நிமிடம் 33 நொடிகள் மூச்சு பிடித்து அவருடைய சாதனையை அவரே முறியடித்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.




Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :