• TRENDING | பர பர

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்புக்கு கல்யாணம்?! மாப்பிள்ளை யார் தெரியுமா?





பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கத்ரீனா கைஃப். இவர் விக்கி கௌஷல் என்பவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாலிவுட்டில் 2003ல், அமிதாப் பச்சன், ஜாக்கி ஷெரப் பத்மலட்சுமி நடிப்பில் வெளியான ‘பூம்’ படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் கத்ரீனா கைஃப். இதுவரை 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, கவர்ச்சிப் புயலாக வலம் வருகிறார்.

ஹாங்காங்கில் பிறந்து வளர்ந்த கத்ரீனா, சிறுவயதாக இருக்கும்போதே பல நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பின்னர் பாலிவுட்டில் நடிக்கத் தொடங்கிய காத்ரினா கைஃப், ‘ரேஸ்’, ‘சிங் இஸ் கிங்’, ‘பாடிகார்ட்’, ‘ஏக்தா டைகர்’, ‘டைகர் ஜிந்தா ஹே’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இப்போதும் பாலிவுட்டில் நம்பர் ஒன் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் ‘மாசான்’, ‘ராஷி’, ‘சஞ்சு’ உட்பட சில இந்தி படங்களில் நடித்த விக்கி கௌஷல் என்பவரை காதலிப்பதாக பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த ஜோடி திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும், இவரது முன்னாள் காதலரான சல்மான் கான், இவர்களின் திருமணத்திற்கு தனது பண்ணை வீட்டை தருவதாக கூறியுள்ளாராம். இவர்களின் திருமணத்திற்கு, சல்மான் கான், யூலியா, ரன்பீர் கபூர், ஆலியா பட், டிங்கில் கண்ணா உட்பல சில முக்கியமானவர்களை மட்டுமே அழைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது.




Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :