• TRENDING | பர பர

இந்த காய்கறி கிலோ 1 லட்ச ரூபாயா? ஆச்சரியத்தில் விவசாயிகள்!





இந்தியாவைச் சேர்ந்த இளம் விவசாயி விளைவித்த காய்கறியானது கிலோ ஒன்றுக்கு, ஒரு லட்ச ரூபாய் வரைக்கும் விலை போனது மற்ற விவசாயிகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

பீகாரைச் சேர்ந்த இளம் விவசாயியான அம்ரேஷ் சிங் என்பவர், ‘ஹாப் ஷூட்ஸ்’ (Hop Shoots) என்ற காய்கறியை விளைவித்துள்ளார். இந்த காய்கறி பற்றி பெரிதாக யாருக்கும் தெரியவில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், சுப்ரியா சாகு என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். உடனே இந்த காய்கறி பற்றிய விஷயம் வைரலானது. அப்படி படுவேகமாக இந்த செய்தி பரவக் காரணம், இந்த காய்கறி ஒரு கிலோ 85,000 ரூபாய் முதல் 1 லட்ச ரூபாய் வரைக்கும் விலை போகிறதாம்.

அதுமட்டுமல்லாமல், இந்த காய்கறியின் விலை இந்திய விவசாயிகளை அண்ணாந்து பார்க்க வைத்துள்ளது. அதோடு, உலகிலேயே அதிக விலையுடைய காய்கறியாகவும் மாறியுள்ளது.

இளம் விவசாயியான 38 வயதான அம்ரேஷ் சிங், பீகாரின் அவுரங்கபாத்தில் உள்ள அவரது விவசாய நிலத்தில்தான் இதை விளைவித்து ஆச்சரியப்படுத்தி உள்ளார். இந்த காய்கறி உற்பத்திக்கு ரூ.2.5 லட்சம் செலவு செய்துள்ளதையடுத்து, 60 சதவீத அறுவடை நல்லபடியாக நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை பூர்வீகமாக கொண்ட இந்த ‘ஹாப் ஷூட்ஸ்’ எனப்படும் காய்கறிக்கு, சர்வதேச அளவில் பெரிய தேவை நிலவுகிறது. இது ஆன்டி பாக்டீரியாவாக பயன்படுவதோடு, டிபி நோய்க்கு எதிராக பயன்படக் கூடியது. அதுமட்டுமல்லாமல், இதிலுள்ள ஆசிட் புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடியதாகவும் இருக்கிறது.

இதற்கு முன்னதாக, ‘ஹாப் ஷூட்ஸ்’ காய்கறி ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள லாஹௌல் பகுதியில் விளைவிக்கப்பட்ட நிலையில், இவற்றை விற்பதற்கு போதிய சந்தை வாய்ப்புகள் இல்லாததால் பெரிய அளவில் பேசப்படவில்லை.

இந்நிலையில் தற்போது இந்த இளம் விவசாயி விளைவித்த காய்கறிக்கு மார்க்கெட்டில் நல்ல விலை கிடைத்துள்ளதால் நாடு முழுவதும் அனைவரையும் வியந்து பார்க்க வைத்துள்ளது.

twitter link : : https://twitter.com/supriyasahuias/status/1377111139914444809

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :