கிரிக்கெட் வீரர் நடராஜன் தனக்கு மஹிந்திரா நிறுவனம் வழங்கிய காரை தனது பயிற்சியாளர் ஜெயபிரகாஷுக்கு பரிசளித்து நெகிழ்ச்சியடையச் செய்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் நன்றாக விளையாடிய இளம் வீரர்களான நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், சிராஜ், நவ்தீப் சைனி, சுப்மன் கில் ஆகியோரை ஊக்கப்படுத்தும் விதமாக மஹிந்திரா நிறுவனம் கார் பரிசளித்தது.
இந்நிலையில், தனக்கு மஹிந்திரா நிறுவனம் வழங்கிய தார் காரை தனது பயிற்சியாளரும் தன்னை ஊக்கப்படுத்தி வருபவருமான ஜெயபிரகாஷுக்கு பரிசளித்து நெகிழ்ச்சியூட்டியிருக்கிறார் நடராஜன்.
Comments