• JUST IN | சுட சுட

கொரோனா 2 வது அலை: இந்திய விமான நிலையங்களில் கடும் கட்டுப்பாடு!





நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்து உள்ளது. கொரோனாவின் 2 வது அலை என்று இதனை கூறுகிறார்கள். தொற்று பரவுவதை தடுக்கும் பணியில் அனைத்து மாநிலங்களும் விழிப்புணர்வுடன் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் விமான நிலையங்களிலும் இன்று முதல் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. தொடக்கத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மீண்டும் முறையாக மேற்கொள்ள விமான நிலையங்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

விமான பயணிகள் அனைவரும் கொரோனா தடுப்பு விதிகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் ஆகியவற்றை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது. மேலும், விதிகளை மீறினால் அபராதம் விதித்தல் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு உள்ளூர் போலீசாரின் உதவியை நாடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

கேஆர்எஸ் சம்பத் says :

பொது இடங்களில் பீடி சிகரெட், எச்சில் உமிழ்தல் போன்றவைகளுக்கு கட்டுபாடு விதிக்காதவரை கோரானாவின் 3-வது அலையையும் எதிர்பார்க்கலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :