• JUST IN | சுட சுட

சட்டமன்ற தேர்தல்: இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!





சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று முதல் 5 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப் படுவதாக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவை தேர்தலையொட்டி இன்று முதல் 5 நாட்களுக்கு இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் சென்னையில் இருந்து மட்டும் இந்த ஐந்து நாட்களுக்குள் 14217 சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், 4-ம் தேதி மற்றூம் 5-ம் தேதிகளில் சென்னையில் 5 மையங்களில் இருந்து பேருந்துகள் புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

கோவை திருப்பூர் சேலம் பெங்களூரிலிருந்து 2644 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :