• JUST IN | சுட சுட

இந்தியாவுக்கு மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் வருகை: மொத்தம் 14- ஆக உயர்வு!





இந்தியாவில் உள்ள ராபேல் போர் விமானம் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.நேற்று இரவு பிரான்ஸிலிருந்து மேலும் மூன்று ரபேல் போர் விமானம் இந்தியா வந்தடைந்தது.

நேற்று வந்த ரபேல் போர் விமானங்களுக்குத் தேவையான எரிபொருள் ஐக்கிய அரபு நாடுகளின் விமானப் படை மூலம் நடுவானில் நிரப்பப்பட்டது.

பிரான்ஸிடம் இருந்து இந்தியா ரூ. 59,000 கோடி மதிப்பிலான 36 போர் விமானங்கள் வாங்குவதற்காகக் கடந்த 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து நான்கு வருடங்கள் கழித்து கடந்து முதல்கட்டமாக ஐந்து விமானங்கள் கடந்த ஆண்டு ஜூன் 29-ம் தேதி இந்தியா வந்தன. இதைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு நவம்பர் 3 -ல் அடுத்த மூன்று விமானங்களும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 27-ம் தேதி மேலும் மூன்று விமானங்கள் இந்தியவிற்கு அனுப்பிவைக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று மூன்று ரபேல் போர் விமானம் வந்தடைந்துள்ளன.

தற்போது இந்தியாவில் உள்ள ரபேல் ரக போர் விமானங்களின் எண்ணிக்கை 14 உயர்ந்திருக்கிறது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :