• TRENDING | பர பர

தோனி, ரெய்னா: பட்டையக் கிளப்பும் பயிற்சி வீடியோ!





ஏப்ரல் 9-ம் தேதி ஐ.பி.எல். சீசன் தொடங்கவிருக்கும் நிலையில், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, சுரேஷ் ரெய்னா இருவரும் ரிலாக்ஸாக தங்களுடைய பாணியில் பயிற்சியில் ஈடுபடும் வீடியோ சற்றுமுன் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்க்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 14-வது சீசன், வருகின்ற ஏப்ரல் 9-ம் தேதி தொடங்கி மே 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் ஒவ்வொரு அணியும் தங்கள் திறமையை வெளிப்படுத்தி பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா சற்று வேகமெடுத்து வருவதால், இந்தியாவில் ரசிகர்கள் இன்றி ஐ.பி.எல். நடத்தப்படுகிறது.

ஐ.பி.எல்.-ன் முதல் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. சென்னை அணி, ஏப்ரல் 10ஆம் தேதி டெல்லி கேபிடல்ஸ் அணியை முதல் லீக் போட்டியில் எதிர்கொள்கிறது. கடந்த சீசனில் லீக் சுற்றுடன் சிஎஸ்கே அணி வெளியேறிய நிலையில், கெத்து காட்டும் முனைப்புடன், சிஎஸ்கே வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கேப்டன் எம்.எஸ். தோனி, சுரேஷ் ரெய்னா இருவரும் ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்பதற்காக தீவிர பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி, சுரேஷ் ரெய்னா ஓய்வு பெற்றிருந்தாலும், இருவரும் கூலாக தங்கள் பாணியில் பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை ‘Anbu Moments’ என்ற கேப்ஷனுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்டுள்ளது. தற்போது வெளியான இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

twitter link : : https://twitter.com/ChennaiIPL/status/1377436906904936449

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :