• JUST IN | சுட சுட

தேர்தல் பிரச்சாரத்தில் டென்ஷனான கமல்: கட்சி சின்னத்தை வீசியெறிந்து பரபரப்பு!





கமலஹாசன் தேர்தல் பிரச்சாரத்தின்போது மைக் வேலை செய்யாததால், தனது கட்சிச் சின்னமான டார்ச்லைட்டை வீசியெறிந்த காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.

தமிழகத்தில் வருகிற 6-ம் தேதி நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கு அவர் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது பாதியிலேயே மைக் தொந்தரவு செய்ததால், கமல்ஹாசன் பேசுவது அங்கிருந்த மக்களுக்கு கேட்கவில்லை.

அதைத் தொடர்ந்து மக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு கமல்ஹாசன் மைக் இல்லாமல் சைகையில் பதில் சொல்லத் தொடங்கி, ஒருகட்டத்தில் கூட்டத்தில் கூச்சலும் குழப்பமும் நிலவியது. இதனால் டென்ஷனான கமல், தனது கட்சி சின்னமான டார்ச் லைட்டை வேகமாக வாகனத்திற்குள் தூக்கி எறிந்து விட்டுப் புறப்பட்டார். இதையடுத்து அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Comments

ஆா்.நாகராஜன் says :

மைக் வேலை செய்யாவிட்டால் ரிப்போ் செய்தால் சாி அதற்காக கோபம் கொள்வதா இவரெல்லாம் நாட்டை ரிப்போ் செய்வாா்

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :