• TRENDING | பர பர

அக்கா சொன்ன வார்த்தையால் உயிர் பிழைத்த தம்பி!





இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவர் மூளை சாவு அடைந்து உடல் உறுப்புகள் தானத்திற்கு தயாரான போது அக்கா கூறிய ஒரு வார்த்தையில் உயிர் பிழைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்தவர் 18 வயதான லீவிஸ் ராபர்ட்ஸ். கடந்த 18 ஆம் தேதி இவருக்கு ஒரு பயங்கரமான விபத்து நேர்ந்துள்ளது. இதனால் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் லீவிஸ் ராபர்ட்ஸை மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் லீவிஸ் மூளை சாவு அடைந்து விட்டதாகக் கூறினர்.

தொடர்ந்து நான்கு நாட்களாக சிகிச்சையில் இருந்தும், எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாததால், மருத்துவர்கள் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்யும்படி குடும்பத்தினரிடம் அறிவுறுத்தினர். குடும்பத்தினரும் உடல் உறுப்புக்களை தானம் செய்ய ஒப்புக்கொண்டதால், அதற்கான அறுவை சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

இறுதியாக ஜேட் ராபர்ட்ஸ் என்பவர், தனது தம்பியான லீவிஸ் ராபர்ட்ஸ்ஸுடன் பேச வேண்டும் என ஆசைப்பட்டார். அதனால் ICUவில் இருக்கும் தனது தம்பி அருகில் அமர்ந்துகொண்டு, அவரது கையைப் பிடித்தபடி, கண்ணீர் மல்க பேசிக் கொண்டு இருந்துள்ளார்.

அச்சமயம் ஜேட் ராபர்ட்ஸ்ஸின் மனதில் ஒரு நம்பிக்கை தோன்ற, “நான் ஒன்று, இரண்டு, மூன்று என்று கூறியதும், நீ உடனே சுவாசிக்க வேண்டும்” என கூறியுள்ளார். அதேபோல் அவரும் கூறி முடிக்க, லீவிஸ் மூச்சு விட தொடங்கியுள்ளார். அதோடு கண்களையும் சிமிட்டியுள்ளார். இந்த சம்பவத்தை அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்த மருத்துவர்களும் பார்த்து அதிர்ந்து போயினர்.

அதன்பின்னர், உடனடியாக லீவிஸுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் தலை, கால்களை அசைக்கவும், வாயை அசைக்கவும் தொடங்கியுள்ளார்.

அதிசயம் என்பது எப்போதாவது நடக்கும். அந்தவகையில், இறக்கப்போகும் தருவாயில் அக்காவின் ஒரு வார்த்தையில் தம்பி உயிர் பெற்ற ஆச்சரிய சம்பவம் குடும்பத்தினருக்கு மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.




Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :