• JUST IN | சுட சுட

தேர்தல் பிரசாரத்தில் துணைமுதல்வர் ஓபிஎஸ் மீது சாணம் வீசிய நபர்! கட்சியினர் அதிர்ச்சி!





தேனி மாவட்டம் போடி அருகே வாக்கு சேகரிக்கச் சென்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீது சாணத்தை வீசிய அ.தி.மு.க தொண்டரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம், போடி தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அங்கு நாகலாபுரத்தில், வாக்கு சேகரிக்க சென்றார். அங்கு அவர் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது, கூட்டத்தில் இருந்த ஒருவர் திடீரென `10 ஆண்டாக இந்த தொகுதிக்கு நீங்கள் என்ன செய்து கிழித்தீர்கள்?’ எதுவுமே செய்யவில்லை` எனக் கூச்சலிட்டவாறே, கையில் வைத்திருந்த சாணத்தை ஓ.பன்னீர்செல்வத்தின் மீது திடீரென வீசினார். ஆனால், சாணம் ஓபிஎஸ் மீது விழாமல், அவருக்கு பாதுகாப்பாக நின்ற போலிஸார் மீது விழுந்தது.

இந்த திடீர் தாக்குதலை கொஞ்சமும் எதிர்பார்க்காத ஓ.பன்னீர்செல்வம், அதிர்ச்சியடைந்து பிரசாரத்தை பாதியில் முடித்துவிட்டு கிளம்பினார். இதையடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :