• TRENDING | பர பர

நீங்க வேற லெவல்... மாப்பிள்ளையைப் புகழ்ந்து தள்ளிய மாமியார்!





‘சார்பட்டா’ திரைப்படத்தில் நடிக்கும் மருமகன் ஆர்யாவின் திறமையைப் பார்த்து வியந்து, ட்விட்டரில் அவரைப் புகழ்ந்து பதிவிட்டுள்ளார் மாமியார் ஷஹீன் பானு.

மிகவும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் படம் ‘சார்பட்டா’. இது ஆர்யாவின் 30வது படமாகும். இந்தப் படத்திற்காக மிகவும் கடுமையாக உடற்பயிற்சிகள் செய்து நடித்துள்ளார் ஆர்யா. வட சென்னையின் குத்து சண்டையை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது.

இப்படத்தில் ஆர்யா கபிலனாகவும், ஜான் கொக்கேன் வேம்புலியாகவும், மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், சந்தோஷ், கலையரசன், பசுபதி உள்ளிட்ட நடிகர்களும் நடித்துள்ளனர்.

பல வெற்றிப் படங்களை இயக்கிய பா. ரஞ்சித் தான் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஏற்கெனவே இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி அனைவரிடத்திலும் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், ஆர்யா குத்துச்சண்டை பயிற்சி செய்யும் வீடியோவும் வைரலானது. அதோடு அவரது உடற்கட்டு, ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், ஆர்யாவின் மாமியார் ஷஹீன் பானு, அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ஆர்யா கட்டுமஸ்தான உடற்கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, விடாமுயற்சி, அர்ப்பணிப்பு, புத்திசாலித்தனம் இவற்றின் உச்சம் இது. எங்களை பெருமைப்பட வைத்துள்ளீர்கள். அடுத்த கட்டத்துக்கு நீங்கள் நகர்ந்து சென்றுள்ளீர்கள் என புகழ்ந்து கூறியுள்ளார். மாமியாரின் இந்த ட்விட்டர் பதிவுக்கு, ஆர்யாவும் நன்றி அம்மா என கூறியுள்ளார்.

twitter link : : https://twitter.com/ShhaheenAhmeed/status/1376086355843801091

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :