• TRENDING | பர பர

வெடிக்கும் எரிமலைக்கு முன் கூலாக வாலிபால் விளையாடிய இளைஞர்களின் வைரல் வீடியோ!





சமீபத்தில் ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை ஒன்று வெடித்துச் சிதறியது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இந்நிலையில், வெடிக்கும் எரிமலைக்கு முன் இளைஞர்கள் சிலர் இணைந்து வாலிபால் விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐஸ்லாந்து நாட்டின் தலைநகரான ரெய்க்ஜாவிக்கிலிருந்து 40 கி.மீ தொலைவில் ஃபேக்ரதால்ஸ்ப்ஜால் எரிமலை உள்ளது. இந்த எரிமலை கடந்த 19 ஆம் தேதியன்று திடீரென வெடித்தது. தொடர்ந்து அந்த பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்த எரிமலை வெடிக்க காரணம் எனவும் தெரிய வருகிறது.

900 ஆண்டுகளில் தற்போது முதன்முறையாக இந்த எரிமலை வெடித்ததால், இணையத்தில் மிகவும் வைரலாகியது. இந்நிலையில், இளைஞர்கள் சிலர், வெடித்துச் சிதறும் எரிமலைக்கு அருகில் நின்றுகொண்டு கூலாக வாலிபால் விளையாடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், அவர்களுக்கு பின்பக்கம் அந்த எரிமலை தீப்பிழம்புகளை கொப்பளித்து கொண்டிருக்கிறது. இதற்கு முன்னதாக இந்த எரிமலை குழம்பில் முட்டை சமைத்து சாப்பிட்ட வீடியோ ஒன்று வைரலானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது இளைஞர்கள் எந்த அச்சமுமின்றி வாலிபால் விளையாடிய வீடியோ வைரலாகியுள்ளது. இதுமட்டுமல்லாமல் பலரும் அந்த எரிமலைக்கு முன்னர் செல்பி எடுத்தும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

twitter link : : https://twitter.com/thelmadogg15/status/1376622330345054213

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :