• JUST IN | சுட சுட

மோசடி புகாரில் சிக்கிய ஹரி நாடார்!?





லோன் வாங்கித் தருவதாக கூறி, 63 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக பனங்காட்டு படை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார், மூர்த்தி தேவர் ஆகியோர் மீது நெல்லை காவல் ஆணையாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கேரள முன்னணி செய்தி சேனலான "இந்தியா விஷன்" டிவி இயக்குநரிடம் லோன் வாங்கி தருவதாக கூறி ரூ.63 லட்சம் மோசடி செய்ததாக ஹரி நாடார் மீது புகார் எழுந்துள்ளது. அவர் மீதும், நெல்லை சேதுராம பாண்டியனின் பேரன் மூர்த்தி தேவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இவர்கள் இருவரும் சேர்ந்து பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், சேனல் இயக்குநரிடம் மோசடி செய்ததாக நெல்லை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடி புகார் குறித்து, போலீசார் தீவிர விசாரனை நடத்தி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில், ஹரி நாடாரும், மூர்த்தி தேவரும் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என தகவல் கசிந்துள்ளது. இதனால் நெல்லை மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :