• JUST IN | சுட சுட

இன்று சென்னையில் தபால் வாக்குப்பதிவு!





தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வரும் வேளையில், சென்னையில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தேர்தல் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கு இன்று தபால் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தமிழகம் முழுவதுவும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இப்பணியில் துணை ராணுவ படையினருடன் காவல்துறையினரும் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இவர்களுடன் சேர்த்து மாநிலம் முழுவதும் உள்ள 80 வயதிற்கு மேற்பட்டவர்கள், மற்றும் கொரோனா நோயாளிகள் தபால் வாக்குப்பதிவு செய்ய மார்ச் 26 முதல் 30ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 7,300 பேர் தபால் வாக்குப்பதிவு செய்ய தகுதியானவர்கள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தபால் வாக்குகளை பெற 70 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் வாக்குப்பதிவு அலுவலர்கள் மூவர், நுண் பார்வையாளர்கள் ஒருவர், காவலர் ஒருவர், வீடியோ பதிவாளர் ஒருவர் என ஆறு பேர் இடம்பெற்றிருப்பார்கள். தபால் வாக்குப்பதிவை பொறுத்த அளவில், வாக்கு அளிப்பதற்கான தேதி, நேரம் ஆகியவை குறுஞ்செய்தி மூலம் வாக்காளர்களுக்கு தெரிவிக்கப்படும். இதனைத் தொடர்ந்து வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று அதிகாரிகள் ஆய்வு நடத்திய பின்னரே வாக்குச்சீட்டு வழங்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெறும்.

சென்னையில் இன்று தபால் வாக்குப்பதிவானது காலை 9 மணிக்கு முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். தபால் வாக்காளர்களுக்கு இருமுறை மட்டுமே வாய்ப்பளிக்கப்படும் என்றும், தவறும் பட்சத்தில் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க வாய்ப்பளிக்க மாட்டாது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :