• JUST IN | சுட சுட

செருப்பால் தூக்கி அடித்து என் மனைவி தாக்கப்பட்டது மறக்க முடியாதது - சுந்தர் சி உருக்கம்!





குஷ்பு தாக்கப்பட்ட நிகழ்வு என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று என்று பிரபல இயக்குநர் சுந்தர் சி உருக்கமாக தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க வேட்பாளராக நடிகை குஷ்பு சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் களமிறங்கியுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ள குஷ்பு வீடு வீடாகச் சென்று வேட்பாளர்களைச் சந்தித்துவருகிறார்.

ஆயிரம்விளக்கு தொகுதி பா.ஜ.க வேட்பாளர் நடிகை குஷ்புவை ஆதரித்து அவரது கணவர் மற்றும் நடிகர் சுந்தர் சி கோடம்பாக்கம் பகுதியில் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

அப்பொழுது ஊடகம் ஒன்றிற்கு சில உருக்கமான விஷயங்களை பகிர்ந்துள்ளார். ‘2010-ம் ஆண்டு என் மனைவி குஷ்பு தாக்கப்பட்டது என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று. அந்தக் கட்சியின் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்று விட்டு வந்தபோது என் வீட்டில் என் அம்மா மற்றும் குஷ்புவின் அம்மா ஆகிய இருவரும் இருந்தார்கள். என் பெண் குழந்தைகள் இருவரும் இருந்தார்கள்.

அந்த தருணத்தில் நான் ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்தேன். அப்பொழுது குஷ்பு மீது தாக்குதல் நடத்தப்பட்டது. செருப்பை தூக்கி அடித்து முந்தானையை பிடித்து எடுத்து தாக்குதல் நடந்ததைக் கேள்விப்பட்டு பதறிப்போனேன் என கூறினார்.

அதோடு, என் வாழ்வில் மறக்க முடியாத நாளில் அதுவும் ஒன்று. நான் பிரச்சாரத்துக்கு வருவதற்கு அதுதான் விதை. சினிமா அரசியலுக்கும் நிஜ அரசியலுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :