• TRENDING | பர பர

பழங்காலத்து விலங்கின் கொம்பை கண்டுபிடித்த இந்திய சிறுவன்!





இந்தியாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன், இங்கிலாந்தின் ஒரு பகுதியில் மண்ணில் குழி தோண்டியபோது, பழங்காலத்து விலங்கின் கொம்பு ஒன்றை கண்டுபிடித்துள்ளான். இது சம்பந்தமான புகைப்படங்கள், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வால்செல் என்ற நகரமானது, இங்கிலாந்தின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாகும். பழம்பொருள் ஆராய்ச்சி புவியியல் நிபுணர்கள், இந்த நகரமானது 400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே கடலடியில் இருந்ததாக கூறுகின்றனர்.

அவ்வப்போது புதையுண்ட பழம் பொருட்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுப்பதும் உண்டு. தற்போது இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட சிறுவன் விலங்கின் கொம்பு போன்ற ஒரு தொன்மையான பொருளைக் கண்டு எடுத்துள்ளான்.

பழம்பொருள் ஆராய்ச்சி ஆர்வம் கொண்ட சிறுவன்தான் 6 வயதான சித்தார்த் சிங் ஜமாத். புழுக்களை தேடுவதற்காக ஈரமண்ணில் தோண்டியபோதுதான், வால்செல் பகுதியில் இந்த பழங்காலத்து விலங்கு கொம்பை தனது தந்தையுடன் சேர்ந்து கண்டுபிடித்துள்ளான்.

இந்த சிறுவனின் தந்தை விஷ் சிங்கும் ஒரு பழம்பொருள் ஆராய்ச்சி நிபுணர்தான். அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், தற்போது கிடைத்துள்ள கொம்பு, 251 முதல் 458 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த விலங்கின் கொம்பு என தெரிவித்துள்ளார். அதோடு, பர்மிங்ஹாம் பல்கலைக்கழக புவியியல் ஆய்வு பிரிவுக்கு, இந்த கண்டுபிடிப்பை அனுப்பி வைக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.




Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :