• TRENDING | பர பர

குத்தாட்டம் போட்டு பின்னியெடுத்த சந்தோஷ் நாராயணன்! வைரல் வீடியோ!





தற்போது ‘விக்ரம் 60’ படத்தில் இசையமைத்து வரும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன், குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

`ஆதித்யா வர்மா` படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகம் ஆனவர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம். இவர் அடுத்ததாக தனது தந்தை விக்ரமுடன் இணைந்து ‘விக்ரம் 60’ல் நடிக்க இருப்பதாகவும், அந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருப்பதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியானது.

இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாரயணன் இசையமைக்க இருப்பதாகவும் கார்த்திக் சுப்புராஜ் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இப்படத்திற்கான இசையமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சந்தோஷ் நாராயணன், பறை இசைக் கலைஞர்களுடன் சேர்ந்து அருமையாக குத்தாட்டம் போட்டுள்ளார். அது சம்பந்தமான வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சந்தோஷ் நாராயணன். தற்போது இந்த வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.

twitter link : : https://twitter.com/Music_Santhosh/status/1376227254544461824

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :