• TRENDING | பர பர

வறண்ட பாலைவனத்தை விவசாயம் செய்து பசுமையாக மாற்றிய முதியவர்!





மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பதை நிரூபிக்கும் விதமாக, தான் வசிக்கும் பகுதியில் உள்ள வறண்ட நிலத்தை பசுமையாக மாற்றி அனைவரையும் கவர்ந்துள்ளார் 70 வயதான Yacouba Sawadogo.

மேற்கு ஆப்பிரிக்காவின் புர்க்கினா பாசோ நாட்டை சேர்ந்தவரான Yacouba Sawadogo ஒரு விவசாயி. இவர் வசித்துவரும் பகுதியில் மழை பெய்யாமல் போனதால், அந்த இடமே வறண்ட பாலைவனம் போல் மாறியிருந்தது. அந்த நிலப்பரப்பைதான் தற்போது பசுமையாக மாற்றியுள்ளார்.

பாரம்பரிய விவசாய முறையில், ZAI Holes என்ற நுட்பத்தை நடைமுறைப்படுத்தி, வறண்டு போன பூமிக்குள் விதைகளை முளைக்கச் செய்துள்ளார். இவரது இந்த விடமுயற்சிக்கு, அவர் தனது 40 ஆண்டு கால உழைப்பை அர்ப்பணித்துள்ளார்.

1980 களில் தான் வசித்த பகுதியில் உள்ள மக்கள் வறட்சி காரணமாக ஊரை காலிசெய்துவிட்டு வெளியேறிய நிலையில், தனி மனிதனாக அயராது உழைத்து, சுமார் 62 ஏக்கர் அளவுக்கு வறண்டிருந்த பூமியை செழிப்பாக மாற்றியுள்ளார். அதுமட்டுமல்லாமல், அந்த தொழில்நுட்பம் குறித்து பலருக்கும் விளக்கியும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :