• JUST IN | சுட சுட

144 தடை உத்தரவு அறிவிப்பு! மீறினால் கடும் நடவடிக்கை!





வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனைத் தொடர்ந்து பலத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதுமட்டுமல்லாமல், அனைத்து கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி புதுச்சேரியில் இன்று பிரச்சாரம் மேற்கொள்ள வருகிறார்.

இதனால் புதுச்சேரி மாநிலம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதையடுத்து புதுச்சேரியில் இன்று ஒரு நாள் மட்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தடை உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :