• JUST IN | சுட சுட

தொடர் முடிந்ததும், ஐபிஎல் அணியுடன் இணைந்திருக்கும் 2 இங்கிலாந்து வீரர்கள்!





இங்கிலாந்து அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு டெஸ்ட், ஐந்து டி20, மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி வந்தது. முதலில் நடைபெற்ற 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3-1 என வெறித்தனமாக தொடரை கைப்பற்றியது.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற டி20 போட்டி தொடரிலும் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் மோதின.

ஒரு நாள் தொடரிலும் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிராக 3 தொடரையும் இந்திய அணி கைப்பற்றி இருப்பதால் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியாவில் ஐபிஎல் 14வது சீசன் வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்க இருக்கிறது. அனைத்து அணியினரும் இதற்காக தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து தொடரை முடித்துவிட்டு இங்கிலாந்து வீரர்கள் டேவிட் மாலன் மற்றும் கிறிஸ் ஜோர்டன் இருவரும் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் இணைந்து இருக்கின்றனர். இதனை பஞ்சாப் கிங்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தியில் அறிவித்திருக்கிறது.

இருவரின் வருகையால், பஞ்சாப் கிங்ஸ் அணி ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். கிறிஸ் ஜோர்டன் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக 2016 முதல் விளையாடி வருகிறார். டேவிட் மாலன் இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ஒன்றை கோடி ரூபாய்க்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் ஏலம் போனார். டேவிட் மாலன் ஐபிஎல் தொடரில் இந்த ஆண்டுதான் அறிமுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

twitter link : : https://twitter.com/PunjabKingsIPL/status/1376465030493859842

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :