• JUST IN | சுட சுட

எங்கு தோன்றியது கொரோனா..? ஆய்வு அறிக்கையை வெளியிட்ட உலக சுகாதார அமைப்பு!





மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கொரோனாவின் தோற்றம் குறித்த ஆய்வு அறிக்கையை, உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸானது வௌவாலிலிருந்து பிற விலங்கு வழியாக மனிதர்களுக்கு பரவியுள்ளது என்று சர்வதேச சுகாதார நிபுணர்கள் முடிவு செய்துள்ளனர். அதேசமயம், கொரோனா முதலில் எங்கு ஆரம்பித்தது என்பது தொடர்பான ஆய்வும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இது குறித்த அறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையின் மூலம் மத்திய சீனாவில் இருக்கும் உயர்பாதுகாப்பு ஆய்வகத்திலிருந்து கொரோனா வெளியேறியதா? அல்லது இறக்குமதி செய்யப்பட்ட உறைந்த உணவுகளின் மூலமாக வூஹான் நகரில் பரவியதா? போன்ற கொரோனாவின் தோற்றம் உருவானது குறித்த பல வரைமுறைகள் தொடர்பில் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

சீன விஞ்ஞானிகள் மற்றும் உலக சுகாதார அமைப்பின் சிறப்பு குழு தெரிவித்திருப்பதாவது கொரோனா வைரஸ் மற்றொரு பகுதியிலிருந்து இறக்குமதியானால், சாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்காது. ஏனென்றால் அந்த சமயத்தில் பிற பகுதிகளில் கொரோனா கண்டுபிடிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த ஆய்வு, கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் தங்கள் நாட்டிலிருந்து கொரோனா ஆரம்பிக்கவில்லை என்ற சீனாவின் கூற்றை பொய் என்று நிரூபித்துள்ளது. ஆனாலும் இந்த அறிக்கை பிற வரைமுறைகளை முழுவதுமாக நிராகரிக்கவில்லை என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் Tedros Adhanam Ghebreyesus தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியுள்ளதாவது, இந்த அறிக்கையை நான் படித்த போது அனுமானங்கள் முழுவதும் வெளிப்படைத்தனமாக உள்ளது. மேலும் தெளிவான ஆய்வுகள் தேவைப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :