பல கோடி மதிப்பிலான லம்போர்கினி காரை சொந்தமாக வாங்கி தனது கனவை நனவாக்கியுள்ளார் நடிகர் பிரபாஸ்.
விலையுயர்ந்த கார்களை வாங்குவதில் அதிக மோகம் கொண்டவர்கள் தென்னிந்திய சினிமாவைச் சேர்ந்த நடிகர், நடிகைகள். பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒரு சிலர் மட்டுமே ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்துள்ளனர். மற்றபடி, அனைவரும் பட்ஜெட் கார்களையே வாங்குகின்றனர்.
ஆனால் தென்னிந்திய நடிகர்கள் அப்படியில்லை. மும்பையுடன் ஒப்பிடும் போது இங்கு வாகன நெரிசல் குறைவு. பெரியளவில் பார்க்கிங் பிரச்னைகள் கிடையாது. அதுவும் ஹைதராபாத் மற்றும் கொச்சின் நகரங்கள் தற்போது தான் வளர்ச்சி அடைந்து வருகின்றன. இதனால் பாலிவுட் நட்சத்திரங்களை விட, ஹைடெக்கான மார்டன் கார்களை வாங்கும் பழக்கம் தென்னிந்திய திரைப் பிரபலங்களிடம் அதிகமுள்ளது.
‘பாகுபலி’ திரைப்படத்தில் நடித்ததின் மூலம் தெலுங்கு நடிகர் பிரபாஸின் சினிமா கேரியர் எங்கோ சென்றுவிட்டது. ஒரு படத்துக்கு ரூ. 100 முதல் ரூ. 150 வரை அவர் சம்பளம் வாங்குவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் உயர்ரக வேரியன்டுடன் கூடிய லம்போர்கினி காரை சொந்தமாக வாங்குவது என்பது தன்னுடைய வாழ்நாள் கனவான கொண்டிருந்தவர் பிரபாஸ். இதை ஒருமுறை சினிமா நேர்காணலின் போதும் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் பிரபாஸின் நீண்ட நாள் கனவு தற்போது நனவாகியுள்ளது. அவர் வாங்க நினைத்த லம்போர்கினி கார் இறக்குமதி மூலம் இந்தியா கொண்டுவரப்பட்டுள்ளது. அதுதொடர்பான புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. பலருக்கும் பிரபாஸ் வாங்கியுள்ள கார் மிகவும் பிடித்துள்ளது. இதனுடைய மதிப்பு இந்திய பணத்தில் சராசரியாக ரூ. 6.5 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது.
Comments