• JUST IN | சுட சுட

ஆ.ராசாவின் உருவப்படத்தை எரித்து அதிமுக தொண்டர்கள் போராட்டம்!





முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து அவதூறாக பேசிய ஆ.ராசாவின் உருவப்படத்தை எரித்து அதிமுக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி அருகே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து ஆ.ராசா அவதூறாக பேசிய சம்பவம் தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் இடையே மன உளைச்சலை ஏற்படுத்தியது. இந்நிலையில், நேற்று மாநிலம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் ஆ.ராசாவின் உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல், சுசீந்திரத்தில் அதிமுக மற்றும் பா.ஜ.க நிர்வாகிகளும் இணைந்து ஆ.ராசாவின் உருவ படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக தொண்டர்கள் மட்டுமின்றி சாதாரண மக்களுக்கும் ஆ ராசாவின் பேச்சு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

ஆ ராசாவின் இந்த அவதூறு பேச்சு அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் நிகழ்ந்துள்ளது. பட்டிதொட்டி என அனைத்து மக்களுக்கும் முதல்வர் மீது அனுதாபம் ஏற்படுத்தும் வகையில் இந்த அவதூறு பேச்சு உள்ளதால் வருகின்ற தேர்தலில் அதிமுக விற்கு வாக்கு வங்கி எகிறும் நிலை ஏற்பட்டுள்ளது.இது திமுக வேட்பாளர்கள் நிர்வாகிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments

Raj says :

DmK speakers have made personal attack on great leaders like Kamara Rajaji and MGR during election times in late sixties and early seventies.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :