• JUST IN | சுட சுட

ஏப்ரல் 2 முதல் தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்!





தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஏப்ரல் 2-ம் தேதி முதல் வெய்யில் சுட்டெரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது:

தமிழகம் , புதுவை, காரைக்கால் பகுதிகளில் நாளை முதல் வரும் 30ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக தெளிவாகக் காணப்படும் . அதிகபட்ச வெப்பநிலை 35 குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். அத்துடன் வரும் ஏப்ரல் 2 முதல் தரைக்காற்று வடமேற்கு திசையிலிருந்து தமிழக பகுதி நோக்கி வீச சாத்தியக்கூறுகள் உள்ளதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் ,ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர்,திருவண்ணாமலை ,விழுப்புரம் , கடலூர், சேலம் , தர்மபுரி, கிருஷ்ணகிரி , கள்ளக்குறிச்சி, நாமக்கல் , கரூர் , திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலையானது இயல்பை விட இரண்டிலிருந்து மூன்று டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்

-இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :