• TRENDING | பர பர

மூக்குக்கு மட்டும் கவசம்: மெக்ஸிகோ ஆய்வாளரின் அசத்தல் கண்டுபிடிப்பு!





கொரோனா பரவலிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக, மெக்சிகோவை சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் மூக்கு மட்டும் மறைக்கும்படியான கவசத்தை உருவாக்கியுள்ளார்.

கொரோனாவிலிருந்து தப்பிக்க உலகம் முழ்வதும் மக்கள் முகக்கவசம் அணிவது தவிர்க்க இயலாததாகி விட்டது. ஆனால், உணவு அருந்துவது, தண்ணீர் குடிப்பது போன்ற சமயங்களில் அதனை கழற்றி வைக்க வேண்டிய சூழலும் ஏற்படுகிறது. அச்சமயத்தில் தங்களுக்கு கொரோனா பரவி விடுமோ என்று சிலருக்கு பயமும் இருந்து வருகிறது.

இந்நிலையில் மூக்கிற்கு மட்டும் அணியும்படியான கவசத்தை மெக்சிகோவை சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் கண்டுபிடித்து அசத்தியுள்ளார். இந்த மூக்கு கவசத்தை போடுவதால், சாப்பிடும்போதோ, தண்ணீர் குடிக்கும்போதோ கழற்ற வேண்டிய அவசியம் ஏற்படாது என்று கூறியுள்ளார்.

கொரோனா பரவலில், சுவாச உறுப்பானது முக்கிய இடம் வகிப்பதால் மூக்கு கவசத்தின் மூலம் அதை கண்டிப்பாக தடுக்க முடியும் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :