• JUST IN | சுட சுட

ஏப்ரல் 1 முதல் கர்நாடகாவுக்குள் நுழைய கட்டுப்பாடு: கர்நாடக அரசு அதிரடி!





நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், ஏப்ரல் 1முதல் பெங்களூரு வரும் அனைத்து பயணிகளுக்கும் கொரோனா நெகடிவ் சான்றிதழ் வத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று கர்நாடக அரசு அறிவித்து உள்ளது.

நாடு முழுவதும் தொற்று பரவல்மீண்டும் அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் முன்னிலையில் அத்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக சுகாதார அமைச்சர் டாக்டர் கே சுதாகர் தெரிவித்ததாவது:

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை பரவி வருகிறது. இதனால் கர்நாடகாவுக்கு வரும் அனைவருக்கும் கொரோனா நெகடிவ் சான்றிதழ் அவசியம் தேவை. இந்த புதிய நடைமுறை ஏப்ரல் 1-ம்தேதி முதல் அமலுக்கு வருகிறது. மேலும் மாநிலத்திற்குள் வரும் அனைவருக்கும், ஆர்டி-பிசிஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

பெங்களூரில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டவர்களில் 60% பேர், மற்ற மாநிலங்களுக்கு சென்று வந்தவர்கள் என்பது உறுதியாகி இருப்பதால் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது. இந்த விதி பெங்களூருக்கு பயணிக்கும் அனைவருக்கும், மற்றும் அனைத்து போக்குவரத்து முறைகளுக்கும் பொருந்தும்.

-இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :