ஆப்பிரிக்காவில் மர்ம நபரால் விமானம் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்காவில் மௌரிட்டானிய ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான விமானத்தை அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் கடத்துவதற்காக விமானத்திற்குள் நுழைந்துள்ளார் .பிறகு அந்த மர்ம நபர் விமான உரிமம் தனக்கு வழங்குமாறு விமான அதிகாரிகளிடம் கூறியுள்ளார் .மேலும் பாதுகாப்பு படையினர் அருகில் வந்தால் விமானத்தை வெடிக்க வைத்துவிடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளான்.
விமானத்தை கடத்தியவன் அமெரிக்க குடிமகன் என்று கூறப்படுகிறது. விமானம் கடத்தப்பட்டதை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் குவிந்துள்ளனர். இதனையடுத்து விமானத்தை கடத்திய மர்ம நபர் போலீசால் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
Comments