• JUST IN | சுட சுட

இனி லைசன்ஸ் வாங்க 8 மட்டும் போட்டால் போதாது: மத்திய அரசின் புதிய உத்தரவு!





இரு சக்கர வாகனங்கள் உள்ளிடவற்றுக்கு ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான விதிகள் கடுமையாக்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் மற்றும் கனரக வாகனங்கள் ஓட்டுவதற்கான லைசென்ஸ் பெற விதிமுறைகள் உள்ளன. இந்நிலையில் இந்த விதிகளை மேலும் கடுமையாக்கப் போவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மக்களவையில் எழுந்த கேள்விக்கு பதிலளித்த நிதின் கட்கரி “ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான விதிகள் கடுமையாக்கப்படும். இதற்கான தகுதி மதிப்பெண் 69க்கும் மேல் இருக்க வேண்டும். அதுபோல நான்கு சக்கர வாகனங்களை ரிவர்ஸில் சரியாக இயக்க வேண்டும். டூ-வீலர் என்றால் 8 போட்டால் மட்டும் பத்தாது. வண்டியை துல்லியமாக வலதுபுறமும் இடதுபுறமும் வளைத்துக் காட்ட வேண்டும்.

-இவ்வாறூ நிதின் கட்கரி கூறியுள்ளார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :