• JUST IN | சுட சுட

இன்று 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: தொடரை வெல்லுமா இந்தியா?





இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனால் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி புனேவில் இன்று மதியம் 1.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை வெல்லும். அதனால்

இந்திய அணி பேட்டிங் மற்றும் பவுலிங்கில் முக்கிய மாற்றம் செய்து இன்றைய போட்டியை எதிர்கொள்கிறது.

அதேபோல் தொடரை இழந்து விடக்கூடாது என்பதற்காக இங்கிலாந்து அணியும் போராடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி20 தொடரை இந்திய அணி வென்றுள்ள நிலையில் ஒருநாள் தொடரையும் இந்திய அணி வென்றால் ஒட்டுமொத்த வெற்றி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :