• TRENDING | பர பர

ஊஞ்சலில் உற்சாகமாக ஆடி மழலையாக மாறிய முதியவர்!





மழலைப் பருவம் என்பது இளசுகள் முதல் முதியவர்கள் வரை அனைவர் மனதிலும் உன்உ என்பதை நிரூபிக்கும் வகையில், ஒரு முதியவர் உற்சாகமாக ஊஞ்சல் ஆடும் வீடியோ ஒன்று பார்ப்போரைக் கவர்ந்துள்ளது.

அந்த வீடியோவில், அந்த முதியவர் முதலில் ஊஞ்சலில் அமர்ந்தபடி, தனது காலை மேலே உயர்த்தி தலைகீழாக கவிழ்கிறார். பின்னர் தனதருகில் இருக்கும் குழந்தைகள் ஊஞ்சல் ஆடுவதைப் பார்த்து, அதேபோல மேலும் கீழுமாக வேகமாக ஊஞ்சல் ஆடும் வீடியோ காட்சி பார்ப்போரை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.

எந்த வயதாக இருந்தால் என்ன, மனதில் மகிழ்ச்சி இருந்தால், எதுவும் சாத்தியமாகும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ள தாத்தாவின் இந்த வீடியோ இணைய வாசிகளால் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. மேலும் குழந்தைகள் இதுபோல் செய்ய வேண்டாம் எனவும் பதிவிட்டுள்ளனர்.

தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Youtube link : : https://www.youtube.com/watch?v=YjiQ9UOisEk

Comments

கேஆர்எஸ் சம்பத் says :

தாத்தா விளையாட வேண்டிய வயசில் விளையாடவில்லை போலும். சுற்றி விளையாடக் காத்திருக்கும் குழந்தைகள்தான் பாவம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :