• JUST IN | சுட சுட

27 வகையான சீர்வரிசைகளுடன் மதிமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு!





மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதியில் மதி.மு.க., வேட்பாளர் புதூர் பூமிநாதன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். நேற்று மதிச்சியம் பகுதியில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது அப்பகுதி மக்கள் 27 வகையான சீர்வரிசைப் பொருட்களுடன் ‘வாங்க மருமகனே’ என்று உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

அப்பகுதி மக்கள் வேட்பாளரான பூமிநாதனை தங்கள் வீட்டு மருமகனை வரவேற்பது போல் ஆடு, மாடு, கோழி, அரிசி, பருப்பு என மளிகை பொருட்களை வைத்து பூரண கும்ப மரியாதையுடன் மலர் தூவி வரவேற்றனர். அதனைப் பார்த்து மகிழ்ச்சியடைந்த வேட்பாளர் பூமிநாதன் பொது மக்களை வணங்கி வாக்கு கேட்டார்.

இதுகுறித்து அப்பகுடி மக்கள் கூறியதாவது:

கிராமப்புறங்களில் தங்கள் வீட்டு மகளை திருமணம் முடித்து கொடுக்கும் போது, மருமகனை சீர்வரிசை கொடுத்து வரவேற்பது வழக்கம். அதே போல் எங்கள் தொகுதியை மகளாகவும், ஓட்டு கேட்டு வரும் வேட்பாளரை மருமகனாகவும் நினைத்து தான் 27 வகையான சீர்வரிசை பொருட்களுடன் வரவேற்பளித்தோம். இவர் இங்கு வெற்றி பெற்று எங்கள் தெற்கு தொகுதியான செல்ல மகளை செல்வ செழிப்புடன் வாழவைப்பார் என்ற நம்பிக்கையில் உள்ளோம்

-இவ்வாறு கூறினர்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :