• JUST IN | சுட சுட

தமிழகத்தில் ஏப்ரல் 29-ம் தேதி வரை தேர்தல் கருத்துக் கணிப்புகள் வெளியிட தடை!





தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடக்கவுள்ளதையொட்டி, ஏப்ரல் 4-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை கருத்துக் கணீப்புகள் வெளியிட தடைவிதிக்கப் பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ள அறிக்கை:

2021ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும். இந்த தேர்தலின்போது, வாக்குப்பதிவிற்கு முன்பும் பின்பும் தேர்தல் முடிவுகள் தொடர்பான கருத்துக் கணிப்புகள் வெளியிடுவது குறித்து சில நடைமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது:

* அந்த வகையில் மற்ற மாநிலங்களில் நாளை (மார்ச் -27) காலை 7 மணி முதல் ஏப்ரல் 29-ம் தேதி மாலை 7.30 மணி வரை, வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை நடத்துவது மற்றும் அதனை அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவது அல்லது வேறு ஏதேனும் முறையில் பரப்புவது தடை செய்யப்பட்டுள்ளது.

* ஒவ்வொரு கட்ட தேர்தல்களின் வாக்குப்பதிவு முடிவடைவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்துடன் முடிவடைகின்ற 48 மணி நேர கால அளவில் (ஏப்ரல் 4ம் தேதி மாலை 7 மணிக்கு பிறகு) ஏதேனும் கருத்துக்கணிப்பு அல்லது பிறவாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உட்பட, எந்தவொரு தேர்தல் விவகாரங்களையும், எந்தவித மின்னணு ஊடகத்தில் காட்சிப்படுத்துவது தடை செய்யப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.

-இவ்வாறு சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :