• TRENDING | பர பர

எரிமலைக் குழம்பில் சமையல் செய்த நபர்… வைரல் வீடியோ!





சமீபத்தில் ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை ஒன்று பல வருடங்களுக்குப் பின் வெடித்து தீக்குழம்பைக் கக்கி [பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தீக்குழம்பில் ஒரு நபர் இறைச்சி, முட்டை சமைத்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐஸ்லாந்து நாட்டில் உள்ள ஃபேக்ரதால்ஸ்ப்ஜால் எரிமலை கடந்த 900 வருடங்களாக அமைதி காத்து, முதல்முறையாக மார்ச் 19-ம் தேதி வெடித்து அந்நகரின் எல்லா பக்கமும் தீக்குழம்பை கக்கி, அனைவரையும் உலுக்கி எடுத்து வருகிறது.

இந்த எரிமலை வெடிப்பதற்கு முன் 4 வாரங்களாக, ஐஸ்லாந்தின் பல பகுதிகளில் சுமார் 40 ஆயிரத்த்க்கு மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனால் எரிமலைக்கு அருகே உள்ள இடங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த எரிமலையின் வெடிப்பு தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் கடந்த சில நாட்களாக வந்துகொண்டிருந்தன.

இந்நிலையில், எரிமலை வெடித்து அதிலிருந்து வருகின்ற எரிமலைக் குழம்பில், நபர் ஒருவர் பன்றி இறைச்சி, முட்டை என சமைப்பதுபோல் ஒரு வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அவர் சமைத்ததில் இறைச்சி, முட்டை மட்டுமில்லாமல் கடாயையும் சேர்த்து அந்த எரிமலைக் குழம்பு எரித்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

Youtube link : : https://www.youtube.com/watch?v=4WDKFIToM6s

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :