• TRENDING | பர பர

ரூ. 450 கோடிக்கு ஏலம் போன உலகின் மிகப்பெரிய கேன்வாஸ் ஓவியம்!





உலகின் மிகப்பெரிய கேன்வாஸ் ஓவியம் ஒன்று, 6,300 லிட்டர் பெயிண்டில் உருவாக்கப்பட்டு 450 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பலரும் பாதிக்கப்பட்ட நிலையில், அதில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பயன்படும் வண்ணம் நிதி திரட்டுவதற்காக, பிரிட்டிஷ் கலைஞர் சச்சா ஜாஃப்ரி ஒரு பிரமாண்டமான கலைப்படைப்பை உருவாக்கியுள்ளார். கிட்டத்தட்ட 17,000 சதுர அடி அளவில் வரையப்பட்டுள்ள இந்த கலைப்படைப்புக்கு ‘The Journey of Humanity’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

6,300 லிட்டர் பெயிண்ட், 1065 பெயிண்ட் ப்ரஷ் உபயோகித்து ஏழு மாதங்களாக இதை உருவாக்கியுள்ளார் கலைஞர் சச்சா ஜாஃப்ரி. இந்த பிரம்மாண்ட ஓவியத்தை 70 பிரேம்களாகப் பிரித்து, 30 மில்லியன் டாலர் இலக்கிற்காக, பிரேம்களை தனித்தனியாக விற்க திட்டமிட்டிருந்தார். இதற்கான ஏலம் துபாயில் நடந்த நிலையில், இந்த பிரம்மாண்ட கலைப் படைப்பால் கவரப்பட்ட ஆண்ட்ரே அப்தவுன் என்ற தொழிலதிபர் அந்த ஓவியத்தை 450 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் ஒரு ஏழைக் குடும்பத்திலிருந்து வந்ததால், ஏழ்மை பற்றியும், சாப்பாடு, படிப்பு இல்லையென்றால் எப்படி இருக்கும் என்பதும் எனக்குத் தெரியும். என்னைப் பொறுத்தவரை, இந்த ஓவியம் மிகவும் சக்தி வாய்ந்தது. அதனால் பிரேம்களாக பிரிப்பது தவறு. கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பயன்படும் வகையில், இந்த முயற்சியில் என்னுடைய சிறு பங்களிப்பும் இருந்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்” என்றார்.




Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :