• JUST IN | சுட சுட

அனைவருக்கும் ஐ போன் பரிசு, நிலாவுக்கு சுற்றுலா, 3 மாடி வீடு: வேட்பாளரின் அசத்தல் வாக்குறுதி!





மதுரை தெற்கு தொகுதி சுயேட்சை வேட்பாளரான துலாம் சரவணன்(33). அனுப்பானடியில் வசித்து வருகிறார். 10ஆம் வகுப்பு வரை படித்த இவர், உள்ளூரில் பல வேலைகளை செய்து வருகிறார். நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில் ’குப்பைத்தொட்டி` சின்னதில் போட்டியிடுகிறார்.

இத்தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் எம்.எல்.ஏ எஸ்.எஸ்.சரவணனும், திமுக கூட்டணி சார்பில் மதிமுகவின் பூமிநாதன் ஆகியோரும் களம் காண்கின்றனர். ஆனால் இவர் விடுத்துள்ள தேர்தல் அறிக்கை தான் இப்போது அந்த தொகுதியில் ஹைலைட் விஷயமாக பேசப்படுகிறது. தான் ஜெயித்து வந்தால் தொகுதிக்கு என்னவெல்லாம் செய்து தரப்படும் என்பதற்கான வரது லிஸ்ட்:

மக்கள் அனைவருக்கும் ஆப்பிள் ஐ போன் வழங்கப்படும்.

அனைவருக்கும் நீச்சல் குளம் வசதியுடன் கூடிய 3 மாடி வீடு கட்டித்தரப்படும்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருடம் ஒரு கோடி ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

அனைத்து வீடுகளுக்கும் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான கார், ஒவ்வொரு வீட்டிற்கும் சிறிய வகை ஹெலிகாப்டர், இல்லத்தரசிகளுக்கு வேலை செய்ய உதவியாக ரோபோட், பெண்களின் திருமணத்திற்கு 100 சவரன் தங்க நகை வழங்கப்படும்.

-இவ்வாறு சரவணன் தேர்தல் வாக்குறுதி அளித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள் அளித்தால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். எனவே சரவணன் மீது தேர்தல் ஆணையம் விசாரணையை நடத்த வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது.




Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :