• JUST IN | சுட சுட

யூடியூப் பார்த்து, தலைமுடியை ஸ்டைலாக்க நினைத்த சிறுவன்: உயிரிழந்த பரிதாபம்! ..





தலை முடிக்கு மண்ணெண்ணை தடவி அதை தீப்பெட்டியை பயன்படுத்தி நேராக்க முயன்ற சிறுவன் உயிரிழந்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது..

யூடியூப் சேனல்களில் போடப்படும் சில வீடியோக்களைப் பார்த்து அதன்படியே பலரும் தங்களது அழகை மெருகூட்டும் செய்கால்களில் ஈடுபடுகின்றனர்.

அந்த வகையில் திருவனந்தபுரம் அருகே வெங்கனூரை சேர்ந்த சிவன் நாராயணன் என்ற 12 வயது சிறுவன் யூடியூப் சேனலை பார்த்து தலை முடியை நேராக்க முயன்றுள்ளார். இதற்காக அவர் தலை முடிக்கு மண்ணெண்ணை தடவி அதை தீப்பெட்டியை பயன்படுத்தி நேராக முயன்றுள்ளார். இதில் தலைமுடியில் தீப்பிடித்து அந்த சிறுவன் உயிரிழந்தான். அச்சமயத்தில் வீட்டில் அச்சிறுவனின் பாட்டி மட்டுமே இருந்துள்ளார். பலத்த தீக்காயங்களுடன் போராடி, அச்சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments

கேஆர்எஸ் சம்பத் says :

சிறுவனின் மரணத்திற்கு காரணம்: 1. பையனின் அறியாமையா? 2. செல் போன்களை சின்னஞ்சிறுசுகளின் கையில் கொடுத்து விட்டு தங்கள் வேலையை பார்க்கும் பெற்றோர்களா? 3. இப்படியெல்லாம் யூ டியூபில் வீடியோ வருவதா? யாரை குற்றம் சொல்வது?

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :