• JUST IN | சுட சுட

ஜேஇஇ முதன்மைத் தேர்வு முடிவுகள்: தமிழக மாணவர் உள்ளிட்ட 13 பேர் முதலிடம்!





பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வான ஜேஇஇ மெயின் 2021 தேர்வு, நாடு முழுவதும் 334 நகரங்களில் 792 தேர்வு மையங்களில் மார்ச் மாதம் 16 முதல் 18-ம் தேதி வரை நடைபெற்றது.

இதில், முதல்முறையாக கார்கில் பகுதியிலும் கோலாலம்பூர், மலேசியா, நைஜீரியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் தேர்வு நடைபெற்றது.

இத்தேர்வு நடந்து முடிந்த 6 நாட்களுக்குள் முடிவுகளை தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. இதில், தமிழக மாணவர் அஸ்வின் ஆபிரஹாம் உள்ளிட்ட 13 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும் ஜேஇஇ மெயின் 2021 தேர்வு நடைபெறும். ஒரே மாணவர் 4 முறையும் தேர்வை எழுதலாம். எனினும் அவற்றில் பெற்றுள்ள அதிகபட்ச மதிப்பெண்களே கணக்கில் கொள்ளப்படும்.

Website : : jeemain.nta.nic.in

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :