• JUST IN | சுட சுட

இன்று முதல் தபால் வாக்குசீட்டு விநியோகம்…!





இன்று முதல் தபால் வாக்கு சீட்டுகள் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. இந்த பணிக்காக 3,820 வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் 70 வாக்குபதிவு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து, தேர்தல் பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில், இந்த தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் நலன் கருதி தபால் வாக்குகள் மூலம் வாக்களிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில் சென்னை மாவட்டத்தில் 7,300 பேர் தபால் சீட்டுகள் மூலம் வாக்களிக்க உள்ளனர். இதனையடுத்து, இன்று முதல் தபால் வாக்கு சீட்டுகள் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. இந்த பணிக்காக தபால் வாக்கு சீட்டுகள் வழங்கும் பணியில் 3,820 வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் 70 வாக்குபதிவு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :