• TRENDING | பர பர

சர்க்கஸில் சண்டையிட்ட இரண்டு யானைகள்! வைரலாகும் வீடியோ!





ரஷ்யாவில் நடைபெற்ற ஒரு சர்க்கஸில் இரண்டு யானைகள் மோதிக்கொண்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரஷ்யாவின் கஸான் என்ற பகுதியில் சர்க்கஸ் காட்சி நடந்து வந்தது. அதில் ஜென்னி மற்றும் மகதா என்றழைக்கப்படும் இரு யானைகளும் ஒரே சமயத்தில் சாகச விளையாட்டில் ஈடுபட்டிருந்தது.

அப்போது மகதா என்ற யானை தன்னுடைய சாகசத்தை செய்ய ஆரம்பிக்கும்போது, ஜென்னி என்ற மற்றொரு யானை அதனை கீழே தள்ளிவிட்டது. பின்னர் சுதாரித்து எழ முற்பட்ட மகதாவை, பார்வையாளர்கள் இருக்கும் பக்கமாக தொடர்ந்து தள்ளிவிட்டுக்கொண்டிருந்தது ஜென்னி யானை. இதை சற்றும் எதிர்பாராத பார்வையாளர்கள் அலறியடித்தபடி அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் சர்க்கஸ் அத்துடன் நிறுத்தப்பட்டது.

யானையின் பயிற்சியாளர் ஒரு யானை மீது மட்டும் கரிசனம் காட்டியிருந்தால் இப்படி மற்றொரு யானைக்கு கோபம் ஏற்பட்டிருக்கலாம் எனவும், இதுகூட இந்த சண்டைக்கு காரணமாக இருக்கலாம் எனவும் உளவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது இரு யானைகளும் மோதிக்கொள்ளும் இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

twitter link : : https://twitter.com/aniket_anikett/status/1373805024766091266

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :