• TRENDING | பர பர

பல் மருத்துவராக பணி துவக்கிய ‘சூப்பர் சிங்கர்’ பிரியங்கா!





திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாக வலம் வந்த பிரியங்கா, பல் மருத்துவராக தனது பணியைத் துவங்கி உள்ளார்.

தமிழில் வெளியாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியும் ஒன்று. இதில் இடம்பெற்று தனது அருமையான குரலால் அனைவரையும் கவர்ந்தவர் பிரியங்கா.

அதன்பின் தமிழ்ப் படங்கள் மூலமாகவும் சில பாடல்களைப் பாடியுள்ளார். இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் போன்ற பிரபல இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடியுள்ளார்.

இந்நிலையில், கடந்த 2018-ல் பல் மருத்துவப் படிப்பை முடித்த பிரியங்கா, தற்போது பல் மருத்துவராகப் பணியாற்றத் தொடங்கியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்களை, ‘பல் மருத்துவ சேவையில் முதல் நாள்’ என்ற கேப்ஷனுடன், அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

twitter link : : https://twitter.com/PriyankaoffI/status/1374279217249099780

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :