• JUST IN | சுட சுட

ஏப்ரல்-30 வரை சர்வதேச பயணிகள் விமானங்கள் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு!





கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாகச் சர்வதேச பயணிகள் விமானங்களை ஏப்ரல் 30-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து விமான போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக சர்வதேச பயணிகள் விமானங்களை இந்தியாவில் ஏப்ரல் 30-ம் தேதி வரை ரத்து செய்துள்ளது.

ஆனால் இந்த விதிமுறை சர்வதேச சரக்கு விமானங்கள் மற்றும் விமான போக்குவரத்துக் கழகத்தில் அனுமதிக்கப்பட்ட குறிப்பிட்ட சரக்கு விமானங்களுக்குப் பொருந்தாது. அவசரக் காலத்தில் கொரோனா நோய் பரவலைப் பொறுத்து குறிப்பிட்ட வழித்தடங்களில் விமானங்களை இயக்க அனுமதிக்கப்படும். கொரோனா வைரஸ் தொற்றுநோயை அடுத்து, கடந்த ஆண்டு மார்ச் 23-ம் தேதிமுதல் சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்தை இந்தியா நிறுத்திவைத்தது.

பின்னர் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்துவரச் சிறப்பு சர்வதேச விமானங்கள் கடந்த ஆண்டு மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை குறிப்பிட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தை அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உட்பட சுமார் 20 நாடுகளுடன் இந்தியா விமான போக்குவரத்துக் கழகம் உடன்படிக்கை செய்துள்ளது.

இந்நிலையில் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்துவரும் நிலையில் சர்வதேச பயணிகள் விமானங்களை இடைநிறுத்தி வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

-இவ்வாறு மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :