• JUST IN | சுட சுட

தேர்தலை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: தமிழக அரசு அறிவிப்பு!





தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதில் போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை படிப்படியாக தமிழக அரசு அறிவித்தது.

அதன் முக்கிய பகுதியாக மீண்டும் குறைந்த அளவிலான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை சென்னையில் இருந்து தினசரி இயங்கும் 2,225 பேருந்துகளுடன் கூடுதலாக 3090 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் ஏப்ரல் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் பிற ஊர்களிலிருந்து சென்னை வருவதற்கு வசதியாக 2,115 சிறப்பு பேருந்துகளும், கோவை, திருப்பூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களிலிருந்து 2644 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :