பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது.
இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (மார்.24),பெட்ரோல் லிட்டருக்கு 16 காசுகள் குறைந்து ரூ.92.95க்கும், டீசல் விலை லிட்டருக்கு 16 காசுகள் குறைந்து ரூ.86.29க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 24 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகி வந்த நிலையில் இன்று குறைந்துள்ளது தேர்தல் நெருங்கிய நிலையில் இப்படி பெட்ரோல் டீசல் விலை குறைப்பு வாகன ஓட்டிகளை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
Comments