• TRENDING | பர பர

மலையாளத்தில் நடிகராக களமிறங்குகிறார் ஏ.ஆர். ரஹ்மான்! தகவல் பகிர்ந்த இயக்குநர்!





ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான், மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும் ‘ஆராட்டு’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் இதுகுறித்து படத்தின் இயக்குநர் பகிர்ந்துள்ளார்.

மலையாளத்தில் பி.உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில், சூப்பர் ஸ்டாரான மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் ‘ஆராட்டு’ படத்தில்தான் இசைப்புயல் நடிக்கவிருப்பதாக மலையாள சினிமா வட்டாரங்கள் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இத்தகவல் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுசம்பந்தமான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகின. இதைத்தொடர்ந்து, ஏ.ஆர்.ரஹ்மான் எப்படி நடிக்க சம்மதித்தார் என்பது குறித்து அப்படத்தின் இயக்குநர், பிரபல மலையாள ஊடகத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

`ஆராட்டு` படத்தின் கதையானது ஏ.ஆர்.ரஹ்மான் ஏற்கும் கதாபாத்திரத்தை சுற்றியே நடக்கிறது. இந்த கேரக்டருக்கு ஏ.ஆர்.ரஹ்மானைத் தவிர வேறு சாய்ஸ் எதுவும் தோன்றவில்லை. ஆனால் அவர் இசைத்துறையில் மிகவும் பிஸி. தவிர நடிக்க ஒப்புக்கொள்வதும் சந்தேகம்தான் என்று தோன்றியது. ஆனால், மோகன்லால் என்னை உற்சாகப் படுத்தினார். அந்த நம்பிக்கையில் ஏ.ஆர். ரஹ்மான் சாரை அணுகியபோது, நான் நினைத்த மாதிரியே `நடிப்பதில் எனக்கு ஆர்வமில்லை` என்று சொல்லிவிட்டார். ஆனால், நாங்கள் விடாமல் ஸ்கிரிப்டை அவருக்கு அனுப்பி தொடர்ந்து பேசினோம். பல முயற்சிகளுக்குப் பின் ரஹ்மான் சம்மதம் தெரிவித்தார்.

ரஹ்மானை நடிக்க வைக்க முயற்சித்ததற்கான காரணம் ஏன் என்று படம் பார்க்கும்போது பார்வையாளர்களுக்கு புரியும். இந்த முயற்சி எங்களுக்கு பலனளிக்கும் என்று நம்புகிறோம்’ என்று பேசியுள்ளார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :