• TRENDING | பர பர

கல்லூரி மாணவிகளுக்கு ஜப்பானிய தற்காப்பு கலை பயிற்சி கொடுத்த ராகுல் காந்தி!





கேரள கல்லூரி மாணவிகளுக்கு, ‘அய்கிடோ’ என்று சொல்லப்படும் ஜப்பானிய தற்காப்பு கலை குறித்து, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி பயிற்சி கொடுத்து அசத்தியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

ஏப்ரல் 6 ஆம் தேதி, கேரளாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி சார்பாக ராகுல்காந்தி கேரளாவில் பரப்புரை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், கொச்சியில் உள்ள புனித தெரேசா கல்லூரியில் மாணவிகளுடனான கலந்துரையாடலின் போது நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற ராகுல் காந்தி, மாணவிகளுக்கு ‘அய்கிடோ’ என்ற ஜப்பானிய தற்காப்பு கலை குறித்து பயிற்சி கொடுத்துள்ளார்.

“இக்கலை நம் அனைவரின் வாழ்க்கைக்கும் பொருந்துவதோடு, நம்மை பலமானதாகவும் மாற்றும். நம்மை சரியான இடத்தில் நிலைநிறுத்திக் கொள்வதன் மூலம் பலமானது வெளிப்படும். அதை செய்யத் தவறினால் பலமானது வெளிப்படாது” எனக்கூறியுள்ளார் ராகுல் காந்தி.

twitter link : : https://twitter.com/INCIndia/status/1373947763642097667




Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :